Sunday, March 22, 2009

மானம் * உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா? அவன் கைகளை வெட்டு. கெஞ்சி வாங்கி கோவணம் கட்டாதே. அம்மணமாகவே போராடு. - காசி ஆனந்தன்

Friday, March 20, 2009

நியூட்டனின் மூன்றாவது இயக்கவிதியைப் பொய்யாக்கிகொண்டே இருக்கிறது - எனது தொலைபேசல்களுக்கும் கடிதங்களுக்கும் காத்திருப்புகளுக்கும் எந்தவிதமான எதிர்வினைகளுமற்ற அடர்த்தியான உனது மௌனம்!

Tuesday, March 17, 2009


எழுக தமிழினம் வெல்க தமிழீழம்எங்கள் கெபிகளை என்றும் சிலந்திகள் கூட வலை நெய்து அடைக்கப் போவதில்லை நீர்க்கால்கள் எம்மண்ணை பிரித்துப் பார்க்கப் பழகி ஆண்டுகள் ஆகிவிட்டனரத்தம் வழிந்தோடும் இடமெல்லாம் யுத்தம் என்ற முழக்கம் எங்கள் குரல்வளைகளில் குடியேறிவிட்டன அகரமும் இகரமும் ழகரமும் எங்கள் மொழியழகு நீ எழுதிப்பழகவே யுகம் வேண்டும் தமிழினத்தின் ஆன்ம எழில் ஆயுதத்தால் சாகாது உங்களால் எங்கள் ஆயுத எழுத்தைக் கூட அழிக்க இயலாது நதிகள் கொந்தளித்து சிங்களத் தீவுகள் நகர்ந்து வந்தாலும் பயப்பட தமிழன் புல்லுக்கு பூவாய் பிறக்கவில்லை வீசிய குண்டுகளால் குடல் நடுச்சாலையில் சிதறிய பின்னும் நாங்கள் நக்கிப் பிழைக்கவில்லை உணவோடு ரத்தமும் தண்ணீருமாய் பிசைந்து தின்று திரியும் விரல்கள் சோறு தின்னும் சுதந்திர காலம் வரைத் துடிக்கும் பூனையின் காலில் அகப்பட்ட ஒனானின் தவிப்பாய் எத்தனை ஆண்டுகள் எம்மக்களுக்கு விளையாட உயிர் அள்ளி இறைக்க தமிழச்சிகளின் அங்கம் மிதியடிகளை சிதற பிடரிகள் காறித் துப்ப கருவறை வழிகள் சிங்களச் சிறுவனுக்கும் சுட்டுப் பழக தமிழர் நெஞ்சு உங்கள் ஆயிரம் சிப்பாய்கள் ஒரு தமிழனின் ..........எம் இனம் எழுந்தால் சிங்களத் தீவுகளுக்குப் பாலம் இராது மண் மனிதர்களுக்குத்தான் முதலில் என ரத்தம் கேட்கும் காளியின் நாக்குகளை அறுத்து எரிந்து கடவுள்களையே தள்ளி வைத்தோம் எம் மண்ணை பிச்சை கேட்கும் இனத்திற்கு வரலாறு எழுதும்வரை வைகை ஆற்றங்கரையில் குடைபிடித்துக் கொண்டு நிற்கமாட்டோம் போராடும் போராளிகள் புதைக்கப்படும் இடத்திலிருந்து வெறும் காலடித்தடங்கள் புறப்படுவதில்லை மலை முகடுகள் மேலே பருந்துகள் பறந்தால் கூட மரணமா தோழா எனப் பதைக்கும் எம் மக்கள் இனவிடுதலை கொடி நோக்கி அண்ணாந்து பார்க்கும் நாள் வரும் எங்கள் கெபிகளை என்றும் சிலந்திகள் கூட வலை நெய்து அடைக்கப் போவதில்லை

நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ

நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ

உலகின் எங்கோஒரு மூலையில்நடக்கும் அநியாயத்தைக்கண்டு உங்கள்மனம் கொதித்தால்நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா

நேசித்த உறவுகள் பிரிந்து சென்றாலும்,
நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்........................!
ஈழத்தில்................................ ?

Sunday, March 15, 2009

வாழ்க தமிழ்.அன்பான தமிழ் பேசும் நெஞ்சங்களே,எதை எழுதுவது?எதை விடுவது?ஒன்றும் புரியாமல்..........................................................................................................விடை பெறுகிறேன்.நாளை நல்ல கருத்துகளோடு சந்திக்கிறேன்.வணக்கம்.

Thursday, March 12, 2009

வாழ்க தமிழ்.....................................,தமிழ் பேசும் நெஞ்சங்களே,ஈழத்தில் நம் இனத்தை படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு எதை கொண்டு நாம் எதிர்ப்பை காட்டபோகிறோம்?தமிழகத்தில் ஈழத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள் சில அரசியல் சாக்கடைகள்.ஈழ மக்களை காக்க ஒன்றுபடுவோம் தமிழினமே.

தேடி நிதந் சோறு தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
நரை கூடி கிழப்பருவமெய்தி பல
கொடுங்கூற்றுக்கு கிரை என பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைபோல் வழ்வேநென்று நினைத்தாயோ..............!

பாரதி

Sunday, March 8, 2009

வாழ்க தமிழ்

என் உயிரினும் மேலான தமிழ் சொந்தங்களே! என் எண்ண கருத்துக்களை உலக தமிழர்களாகிய என் இன மக்களின் மனதுக்குள் செலுத்த விரும்பி இந்த வலைப்பதிவை துவக்குகிறேன்.அன்பான என் மக்கள் தங்களுடைய கருத்துகளையும் என்னிடம் தெரிவிக்கலாம்.நான் தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய இயக்குனர்.கே.பாக்யராஜ் அவர்களின் உதவியாளராக இருந்தவன்.தற்போது படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.